×

நடிகை சோபிதாவுடன் நாக சைதன்யா டேட்டிங்

ஐதராபாத்: 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த சமந்தாவும், நாக சைதன்யாவும் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாங்கள் பிரிவதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இது கோடிக்கணக்கான ரசிகர்களை வேதனையடைய வைத்தது. சமந்தா இதை எல்லாம் கடந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தாவுடன் பிரிவை அறிவித்தாலும், சமந் தாவின் சந்தோஷத்துக்கு முக்கியம் தருவதாகவே பல பேட்டிகளில் நாக சைதன்யா குறிப்பிட்டார். சமந்தா பற்றி அக்கறையாக பல கருத்துகளைப் பகிர்ந்தார். இந்த நேரத்தில் நடிகை சோபிதா துலிபலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் சென்று வருவதாக தகவல் பரவியுள்ளது. இருவரும் மிக நெருக்கமாகப் பழகி வருவதால், நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நாக சைதன்யா தற்போது ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதிதாக இடம் ஒன்றை வாங்கியுள்ளார்.

இங்கு தற்போது வீடு கட்டப்பட்டு வருகிறது. நாக சைதன்யாவும், சோபிதா துலிபலாவும் இந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று, அதிக நேரம் ஒன்றாக செலவிட்டு வருகிறார்களாம். வீடு முழுவதையும் சோபிதா துலிபலாவுக்கு சுற்றிக் காட்டிய நாக சைதன்யா, பிறகு சோபிதா துலிபலாவுடன் ஒரே காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐதராபாத்தில் சோபிதா துலிபலாவின் பிறந்தநாளை இருவரும் மிக நெருக்கமாக, உற்சாகமாக கொண்டாடி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த தகவலை எல்லாம் கேட்டு கொதித்துப் போயிருக்கிறார் சமந்தா. நாக சைதன்யா நடிகையை காதலிப்பதாக சொல்வது புரளி என்று அவர் கூறியுள்ளார். நாக சைதன்யாவைப் பிரிந்துவிட்ட சமந்தா, இந்த விஷயத்தில் ஏன் தலையிடுகிறார் என்று, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Tags : Naga ,Sobitha , Naga Chaitanya dating actress Sobitha
× RELATED பைக் திருடும் மர்ம ஆசாமி வீடியோ வைரல் ஆரணியில் நள்ளிரவில்